'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பில் விபத்து..
13 ஆனி 2024 வியாழன் 15:31 | பார்வைகள் : 10614
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தக்லைஃப்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் பிரபல நடிகரின் கால் எலும்பு முறிந்து விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா,அசோக் செல்வன் உட்பட பல பிரபலங்கள் நடித்து வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் சமீபத்தில் பிரபலம் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இணைந்தார். இவர் ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது காயமடைந்ததாகவும் அவரது கால் எலும்பு முறிந்து விட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வரும் ஜோஜு ஜார்ஜ் முழுமையான குணமடைந்தவுடன் மீண்டும் ஹெலிகாப்டர் காட்சி படமாக்கப்படும் என்றும் அதுவரை அவர் முழு ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா,அசோக் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan