இலங்கையில் அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து

26 ஆவணி 2023 சனி 10:55 | பார்வைகள் : 8781
இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரட்சியான காலநிலை மற்றும் நீர் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளித்தல், மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகள் எலிக்காய்ச்சல் பரவுவதை அதிகரிக்கச் செய்யும் எனவும் குறைந்தளவு நீர்மட்டம் உள்ள இடங்களில் குளிப்பதால் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.