Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீ ஏ- 388 பேர் மாயம்!

அமெரிக்காவில் பற்றி எரியும்  காட்டுத் தீ ஏ- 388 பேர் மாயம்!

26 ஆவணி 2023 சனி 10:44 | பார்வைகள் : 3112


அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் காட்டுத் தீ  பற்றி எரிந்தது.

குறித்த பகுதிகளில் மாயமானவர்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதில் 115 பேர் பலியாகினர்.

மேலும் 271 கட்டுமானங்கள், 19000 வீடுகள், கடைகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் காணாமல் போனவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்திய பகுதிகளில் 388 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய புலனாய்வு அமைப்பான எப்ஃபிஐ கூறியதாக தெரிவித்துள்ளது.        

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்