தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

20 ஆவணி 2023 ஞாயிறு 03:05 | பார்வைகள் : 8578
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தெஹிவளை ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்று இரவு உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமது வீட்டிற்கு முன்னால் உள்ள வீதியில் நின்றிருந்தபோது, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயதுடைய குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025