அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதியில் மாற்றம்!
19 ஆவணி 2023 சனி 15:11 | பார்வைகள் : 8412
நேற்றுடன் நிறைவடைந்த வாரத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 12.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபாவுக்கு நிகரான இந்தியா ரூபா 13.2 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், ஜப்பானிய யென் 23.8 சதவீதத்தினாலும், ஸ்ரேலிங் பவுண் 6.5 சதவீதத்தினாலும், யூரோ 10.4 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan