Paristamil Navigation Paristamil advert login

சாம் பிட்ரோடா: பதவியை பறித்தார் கார்கே

சாம் பிட்ரோடா: பதவியை பறித்தார் கார்கே

8 வைகாசி 2024 புதன் 15:14 | பார்வைகள் : 7941


சர்ச்சை பேச்சில் சிக்கிய காங். மூத்த தலைவரும், அயலக அணி பொறுப்பாளரான சாம்பிட்ரோடா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் 'இந்தியாவில் சீனர்கள், அரேபியர், ஆப்ரிக்கர்கள் என பலதரப்பட்ட தோற்றம் கொண்டவர்கள் வாழும் தேசத்தை நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என பேசினார்.

இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவரது பேச்சு நடைபெற உள்ள பல கட்ட தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதாலும் , வா்க்கு வங்கியையும் பாதிக்கும் என்பதாலும் காங்.கட்சியில் அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டு அணி பொறுப்பாளர் பதவியை இன்று (08.05.2024) ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக்கொண்டதாக மற்றொரு மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்