பிரேசிலில் கொட்டித்தீர்த்த மழை - 90 பேர் பலி

8 வைகாசி 2024 புதன் 13:38 | பார்வைகள் : 6044
பிரேசிலின் தெற்குப் பகுதிகளில் பெய்த பெருமழையால் ரியோ கிராண்ட் சுல் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர்.
கடும் மழை காரணமாக கட்டிடங்களின் மேற்கூரையில் தஞ்சமடைந்திருக்கும் ஏராளமானோர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
போர்ட்டோ அல்க்ரேவில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்டொராடோ சுல் பகுதிகளில் பலர் வீடிழந்து சாலையோர பிளாட்பாரங்களில் தங்கியபடி உணவுக்காக காத்திருக்கின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க குறுகிய தெருக்களில் படகுகளில் மற்றும் ஹெலிகாப்டரில் தேடுதல் பணி முடுக்கு விடப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025