விஜய்யின் 'கோட்' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

8 வைகாசி 2024 புதன் 12:18 | பார்வைகள் : 5835
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகர் கேமியோ கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உள்பட பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக வெங்கட் பிரபு படத்தில் ஒரு பிரபலம் கேமியோ கேரக்டரில் நடிக்கும் காட்சிகள் வரும் என்ற நிலையில் இந்த படத்தில் அதுபோல சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
ஆனால் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த போது சிவகார்த்திகேயன் 'கோட்’ படம் உள்பட எந்த படத்திலும் கேமியோ கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் தற்போது அவர் ’அமரன்’ மற்றும் ’எஸ்கே 23’ படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் ’கோட்’ படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுவது முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறியுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025