Paristamil Navigation Paristamil advert login

சென்னை அணியில் இருந்து விலகிய  முக்கிய வீரர்...

சென்னை அணியில் இருந்து விலகிய  முக்கிய வீரர்...

8 வைகாசி 2024 புதன் 11:47 | பார்வைகள் : 3142


2024 ஆண்டிற்கான IPL போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் சென்னை அணியில் இருந்து ஒரு சில முக்கிய வீரர் விலகி செல்கின்றார்கள்.

அதையடுத்து தற்போது மற்றுமொரு முக்கிய வீரரும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் (IPL) சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை நடைபெற்ற 11 ஆட்டங்களில் 6 வெற்றிகளை பெற்றுள்ளது. அதாவது 5 போட்டியில் தோல்வியடைந்துள்ளது.  

இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில் சென்னை அணியில் இருந்து சில முக்கிய வீரர் விலகிக்கொண்டு இருந்தார்கள்.

மதீச பதிரனா (Matheesha Pathirana), முஸ்தபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) ஆகியோர் விலகியுள்ளனர். மேலும் சில வீரர்களுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றின்போது, டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்பியிருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (England Cricket Board) அறிவித்துள்ளதால் சிஎஸ்கே வீரர் மொயின் அலி (Moeen Ali), பிளே ஆப் சுற்றின்போது அணியில் இருக்க மாட்டார் என கூறப்படுகின்றது.

மேலும் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய கடிதத்தையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமான சில வீரர்கள் அணியில் இருந்து வெளியேறுவது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்