Paristamil Navigation Paristamil advert login

Juvisy-sur-Orge : தொடருந்து நிலையத்தின் அருகே இளைஞனுக்கு வாள்வெட்டு!

Juvisy-sur-Orge : தொடருந்து நிலையத்தின் அருகே இளைஞனுக்கு வாள்வெட்டு!

7 வைகாசி 2024 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 13395


Juvisy-sur-Orge (Essonne) தொடருந்து நிலையத்தின் அருகே வைத்து 20 வயதுடைய இளைஞனுக்கு வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று மே 6 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் மாலை 8 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. rue de Draveil வீதியில் தொடருந்தினை பிடிப்பதற்காக நடந்து சென்ற குறித்த இளைஞனை வழிமறித்த நபர் ஒருவர், கையில் வைத்திருந்த நீண்ட கத்தி (வாள்) ஒன்றினால் தாக்கியுள்ளார். அடிவயிற்றிலும், பின் பக்கத்திலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளனர்.

தாக்குதலாளில் 26 வயதுடைய வீடற்றவர் (SDF) என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பி ஓடியிருந்த நிலையில், காவல்துறையினர் தீவிர தேடுதல் மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.

படுகாயமடைந்த இளைஞன் Kremlin-Bicêtre மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்