Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : €300,000 மதிப்புள்ள பணம், நகை கொள்ளை!

பரிஸ் : €300,000 மதிப்புள்ள பணம், நகை கொள்ளை!

7 வைகாசி 2024 செவ்வாய் 11:11 | பார்வைகள் : 6910


பரிசில் கடந்தவாரம் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. ஆளில்லா வீடொம்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் €300,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள், பணத்தினை கொள்ளையிட்டுக்கொண்டு சென்றனர்.

மே 2 ஆம் திகதி வியாழ்க்கிழமை அதிகாலை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் rue Marbeau வீதியில் உள்ள வீடொன்றுக்குள் அதிகாலை 4.30 மணி அளவில் நுழைந்த கொள்ளையர்கள், சுவற்றுடன் சேர்த்து புதைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகங்கள் மூன்றை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.  சம்பவத்தின் போது உரிமையாளர் வீட்டில் இல்லை எனவும் மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பிய பின்னரே கொள்ளையிடப்பட்டுள்ளதை அறிந்துகொண்டனர்.

நகைகள், பணம் என மொத்தமாக €300,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்