யுவன் ஷங்கர் ராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது?
7 வைகாசி 2024 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 6361
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் வாழ்க்கை வரலாறு உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் யுவன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இதனை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு விழா நடைபெற்றது. படத்தின் திரைக்கதையை நடிகர் கமல்ஹாசன் எழுதுகிறார்.
இதற்கிடையில் நடிகர் தனுஷூம் தன்னுடைய ‘ராயன்’ பட வெளியீடு மற்றும் ‘குபேரா’ படங்களில் பிஸியாக உள்ளார். இப்படியான சூழலில்தான் இளையராஜாவின் மகன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வாழ்க்கை வரலாறு உருவாகிறது என இயக்குநர் இளன் கூறியுள்ளார்.
’பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கியவர் இளன். தற்போது கவின் நடிப்பில் மே 10 அன்று வெளியாக இருக்கும் ‘ஸ்டார்’ படத்தையும் இயக்கி இருக்கிறார். படத்தின் புரொமோஷனுக்காக தொடர்ந்து யூடியூப் தளத்தில் பேட்டிக் கொடுத்து வருகிறார் இளன். அதில், நேற்று வெளியான யூடியூப் பேட்டி ஒன்றில், யுவன் பயோபிக் உருவாகும் என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பேட்டியில் இளன், “யுவனுடைய பயோபிக் எடுக்க வேண்டும் என்று சொல்லி அவரிடமும் ஒன்லைன் சொல்லி இருக்கிறேன். அது அவருக்கும் பிடித்துவிட்டது. படத்தை நான்தான் இயக்குவேன் என்று சொல்லி, பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒப்பந்தமும் போட்டிருக்கிறேன். படத்தில் யுவனின் ஆரம்ப காலம், அவருடைய வளர்ச்சி என அனைத்து விஷயங்களும் இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார்.
இளையராஜாவுக்கு அடுத்தபடியாக யுவனின் வாழ்க்கை வரலாறு விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள் என்ற செய்தி யுவன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan