கனடாவில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுப்படும் மாணவர்கள்

7 வைகாசி 2024 செவ்வாய் 08:42 | பார்வைகள் : 5539
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் சட்டவிராத சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களை இலக்கு வைத்து இணைய வழியில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ பொலிஸார் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒன்றாரியோவின் ஒரில்லா நகரில் மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணைய வழியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் செலுத்த தவறிய மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Topbets என்ற இணைய தளத்தின் வழியாக இந்த மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.