காதலுக்கு வயதில்லை என்பதனை நிரூபித்த திருமணம்..!

6 வைகாசி 2024 திங்கள் 14:30 | பார்வைகள் : 2665
கனடாவில் காதலுக்கு வயதெல்லை கிடையாது என்பதனை நிரூபிக்கும் வகையிலான திருமண நிகழ்வொன்று பதிவாகியுள்ளது.
கனடாவின் சஸ்காடூனில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
82 வயதான சூசன் நியுபெல்ட் என்ற பெண் 90 வயதான உல்ரிச் ரிச்டர் என்பரை கரம் பிடித்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்னதாக இருவரும் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் ஒரே தெருவில் சில வீடுகள் தங்கி வாழ்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதாகவும் இந்த நட்பு இறுதியில் காதலாக மலர்ந்தது எனவும் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இருவரும் 20ம் நூற்றாண்டில் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக கனடாவிற்கு குடிப்பெயர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள் என்பதுடன் இருவரது வாழ்க்கைத் துணைகளும் தற்பொழுது உயிருடன் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் இரகசியமான ஒர் இடத்திற்கு தேனிலவிற்காக செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.