டைட்டானிக் நடிகர் உயிரிழப்பு…
6 வைகாசி 2024 திங்கள் 12:46 | பார்வைகள் : 6982
உலக புகழ்பெற்ற படம் 'டைட்டானிக்'. இதில் பிரபலமானவர்கள் லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் இருவரும். இப்போது ஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இருவருமே ஆஸ்கர் விருதுகளை வென்றார்கள். இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டர்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதில் ஒரு கேரக்டர்தான் டைட்டானிக் கப்பலின் கேப்டன் பெர்னாட் ஹில்.
கப்பல் ஆபத்தில் சிக்கியதும் அதை காப்பாற்ற போராடுவது, பயத்தில் இருக்கும் பயணிகளுக்கு தைரியம் அளிப்பது என்று அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது. கடைசியில் தனது தோல்வியால் மனசாட்சி உறுத்த தனது கேப்டன் கேபினில் நின்றபடி தண்ணீரில் முழ்கி உயிர் துறப்பார். அவரின் நேர்மையும், உழைப்பும் உண்மையான கேப்டனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
1975ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய பெர்னார்ட் ஹில் கடந்த ஆண்டு வரை நடித்தார். 'பாரவெர் யங்' என்பதுதான் அவர் கடைசியாக நடித்த படம். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், 79 வயதான பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களும், ஹாலிவுட் திரை பிரபலஙகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.+
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan