கடற்கரையில் ஒதுங்கிய அகதியின் சடலம்!!

6 வைகாசி 2024 திங்கள் 07:24 | பார்வைகள் : 9993
Dunkerque (Nord) அருகே உள்ள கடற்கரை ஒன்றில் அகதி ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
சனிக்கிழமை, மே 4 ஆம் திகதிமாலை தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். Bourbourg கடற்கரையில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. கடலில் இருந்து அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
வயது அண்ணளவாக கணிக்கப்பட்டுள்ளது எனவும், சடலம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலக்கால்வாய் ஊடாக எண்ணற்ற அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணிக்க முயற்சிகள் மேற்கொள்ளுவதும், அதில் தோல்வியடைந்து பலியாகிறமையும் குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1