Villejuif : €25,000 யூரோக்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!
6 வைகாசி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 8740
வீதி சோதனை நடவடிக்கை ஒன்றில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Villejuif (Val-de-Marne) நகரில் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். rue Paul-Bert வீதியில் நின்றுருந்த சிவில் ஆடை அணிந்திருந்த காவல்துறையினர், அங்குள்ள தரிப்பிடம் ஒன்றில் நின்றிருந்த மகிழுந்து ஒன்றை சோதனையிட்டனர்.
சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதையடுத்து, மகிழுந்துக்குள் இருந்து கஞ்சா போதைப்பொருள் மணப்பதை அறிந்துகொண்டு முழுமையாக அதனை சோதனையிட்டதில், அதில் இருந்து 800 கிராம் எடையுள்ள கஞ்சாவினைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், €20,180 யூரோக்கள் பணத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.
இருவரும் கைது செய்யப்பட்டு Kremlin-Bicêtre காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan