Paristamil Navigation Paristamil advert login

Sevran : துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

Sevran : துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

5 வைகாசி 2024 ஞாயிறு 17:19 | பார்வைகள் : 9997


இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை Sevran (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

Basse பகுதியில் இத்துப்பாக்கிச்சூடு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. வீதியில் நின்றிருந்த இருவர் மீது நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். 

காவல்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தபோது, அவர்கள் இருவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்