ஹமாசுடன் சமரச பேச்சுவார்த்தை! - இஸ்ரேலிய பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி மக்ரோன்!
5 வைகாசி 2024 ஞாயிறு 16:38 | பார்வைகள் : 8314
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாஹுவிடம் தொலைபேசியூடாக உரையாடினார். இஸ்ரேல்-ஹமாஸ் தரப்புக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு தனது ஊக்கத்தினை மக்ரோன் வழங்கியுள்ளார்.
இந்த சமரச பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கவேண்டும் என ஜனாதிபதி மக்ரோன் கேட்டுக்கொண்டதாக எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் ரஃபா (Rafah) நகரம் மீது தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அங்கு பல நூறு பேர் கடந்த மாதங்களில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மே 5 ஆம் திகதி இரு தரப்பு பேச்சுவார்த்தை எகிப்தின் Cairo நகரில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan