Sevran : மிதிவண்டி சாரதியை இடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய மகிழுந்து!
5 வைகாசி 2024 ஞாயிறு 15:18 | பார்வைகள் : 10364
மிதிவண்டியில் பயணித்த ஒருவரை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சாரதி தேடப்பட்டு வருகிறார்.
Sevran (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பம் நேற்று மே 4 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. Allée des Peupliers பகுதியில் இரவு 11.30 மணி அளவில் மிதிவண்டியில் பயணித்த 34 வயதுடைய ஒருவரை, பின்னால் சென்ற மகிழுந்து ஒன்று இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்று மறைந்தது.
படுகாயமடைந்த மிதிவண்டி சாரதி மீட்கப்பட்டு பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தப்பி ஓடிய சாரதி தேடப்பட்டு வருகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan