அண்ணாமலை பயோபிக்கில் நடிக்கும் விஷால்...

5 வைகாசி 2024 ஞாயிறு 14:53 | பார்வைகள் : 5216
ஹரி- விஷால் கூட்டணியில் ‘ரத்னம்’ படம் அண்மையில் வெளியானது. அளவுக்கதிகமான வன்முறை, சுமாரான கதைக்களம் காரணமாக இந்தப் படம் தோல்வியைத் தழுவியது. இதற்கடுத்து நடிகர் விஷால் நடிக்கும் அடுத்தப் படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக் உருவாகிறது. அதில்தான் அண்ணாமலையாக விஷால் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாஜகவில் இணைவதற்கு முன்னர் ஐபிஎஸ் படித்து கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர் அண்ணாமலை. தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வராவார், பிரதமராவர் என்றெல்லாம் அண்ணாமலை மீது அவரது விசுவாசிகள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு அதிகாரியாக இருந்து கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்தது வரை அவருடைய பயணத்தை மையப்படுத்தி அவரது பயோபிக் படம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
படத்தை இயக்க இருப்பது யார், மற்ற நடிகர்கள் குறித்தான விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் கூட ‘ரத்னம்’ பட விழா மேடையில் ‘ஈபிஎஸ்ஸா, ஓபிஎஸ்ஸா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘ஐபிஎஸ்’ என பதிலளித்தார் விஷால்.
அண்ணாமலையைத்தான் அப்படி மறைமுகமாகச் சொன்னார் விஷால் என நெட்டிசன்கள் கூறினர். இப்போது அவரது பயோபிக் படத்திலேயே விஷால் நடிக்கிறார் என்பது பேசுபொருளாகியுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025