Yvelines : மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நோயாளி- சடலமாக மீட்பு!

5 வைகாசி 2024 ஞாயிறு 11:20 | பார்வைகள் : 11256
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கிருந்து வெளியேறியிருந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Les Mureaux (Yvelines) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அல்சைமர் நோயினால் சிகிச்சை பெற்று வந்த 75 வயதுடைய ஒருவர் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி திங்கட்கிழமை மருத்துவமனையில் இருந்து காணாமல் போயிருந்தார். அவர் தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.
இது தொடர்பில் அவரது குடும்பத்தினர் மிகவும் கவலையுற்றிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஏப்ரல் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் Bècheville காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபரின் குடும்பத்தினர், மருத்துவமனை மீது வழக்கு தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025