இன்று காலை துப்பாக்கிச் சூடும் பலியும்!!

5 வைகாசி 2024 ஞாயிறு 08:28 | பார்வைகள் : 6950
இன்று காலை 5 மணியளவில் துலுஸ் நகரில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழந்துள்ளது.
துலுசின் தென்-கிழக்குப் பகுதியில் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட மற்றைய இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காவற்துறையினரின முதற்கட்டத் தகவல்களின் படி, அங்குள்ள களியாட்ட விடுதி ((discothèque) ஒன்றின் வாகனத் தரிப்பிடத்திற்குச் சென்ற நபரை, அங்கு தரித்து நின்ற சிற்றுந்தில் இருந்து இறங்கிய இருவர், 9mm துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டுள்ளனர்.
இதில் கொல்லப்பட்ட 32 வயதுடைய நபர் அண்மையிலேயே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் துப்பாக்கிச் சூட்டில் அருகாமையில் இருந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025