யாழில் வீடொன்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு: 16 வயதான மகன் மாயம்
5 வைகாசி 2024 ஞாயிறு 06:13 | பார்வைகள் : 14662
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மகன் காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
37 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த பெண்ணின் 16 வயதான மகன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கணவன் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இரண்டு பிள்ளைகளுடன் குறித்தப் பெண் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மகள் அயல் வீட்டில் உறங்கச் சென்ற நிலையில், மறுநாள் காலை (சனிக்கிழமை) வந்து பார்த்த போது தாய் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், தனது சகோதரனும் வீட்டில் இல்லாதிருப்பதை அறிந்த சகோதரி, அயல் வீட்டவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், காணாமல் போன சிறுவனையும் தேடி வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan