பரிஸ் : ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த சிறுமி - மகிழுந்துக்குள் சிக்கினார்..!

4 வைகாசி 2024 சனி 14:01 | பார்வைகள் : 7641
பரிசில் மே 2 ஆம் திகதி வியாழக்கிழமை, கோரமான விபத்து ஒன்று இடம்பெற்றது. ஸ்கூட்டர் ஒன்றில் இருந்து தவறி விழுந்த இரண்டு வயது சிறுமி ஒருவரை மகிழுந்து ஒன்று இடித்துள்ளது.
20 ஆம் வட்டாரத்தின் rue de la Plaine வீதியில் உள்ள பாதசாரி கடவையில், காலை 9 மணி அளவில் பெண் ஒருவர் தனது 2 வயது மகளுடன் ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்துள்ளார். அதன்போது சிறுமி தவறி விழுந்துள்ளார்.
சமிக்ஞைக்காக காத்திருந்த மகிழுந்து ஒன்று, சிறுமி விழுந்ததை கவனிக்காமல் முன்னேறிச் சென்றுள்ளது. அதையடுத்து சிறுமி மீது மகிழுந்து ஏறி இறங்கியுள்ளது.
சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் தற்போது செயற்கை கோமாவில் வைக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டார். அவருக்கு மதுபோதை பரிசோதனை செய்யப்பட்டது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025