Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இந்தோனேசியாவில் Ruang எரிமலையின் சீற்றம் வெளியேற்றப்படும் மக்கள்

 இந்தோனேசியாவில் Ruang எரிமலையின் சீற்றம் வெளியேற்றப்படும் மக்கள்

4 வைகாசி 2024 சனி 11:29 | பார்வைகள் : 14766


இந்தோனேசியாவில் Ruang எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படும் நிலையில் 10,000 பொதுமக்களை நிரந்தரமாக இடம்பெயரச் செய்யும் முடிவுக்கு அரசு வந்துள்ளது.

குறித்த பகுதியில் குடியிருப்பது என்பது ஆபத்தான விடயம் என்பதை உறுதி செய்த நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Ruang தீவில் கிட்டத்தட்ட 9,800 மக்கள் குடியிருந்து வருகின்றனர். 

ஆனால் சமீப வாரங்களில் எரிமலையில் தொடர்ந்து எரிமலைக்குழம்பு கசிந்ததை அடுத்து அனைத்து குடியிருப்பாளர்களும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அத்துடன் வானத்தை நோக்கி கிலோமீற்றர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியும் வருகிறது. 

இந்நிலையில், எரிமலையின் எச்சரிக்கை நிலையை மிக உயர்ந்த நிலைக்கு இந்த வாரம் அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.

 மனாடோ பகுதியில் அமைந்துள்ள மாகாண விமான நிலையமும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

மேலும், அந்த மலையின் ஒருபகுதி சரிந்துவிழ நேர்ந்தால், அதனால் சுனாமி ஏற்படும் அபாயமும் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, Bolaang Mongondow பகுதியில் எளிமையான ஆனால் நிரந்தரமான நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்பகுதியில், Ruang தீவு மக்கள் குடியமர்த்தப்பட உள்ளனர். Ruang தீவில் இருந்து சுமார் 125 மைல்கள் தொலைவில் இந்த குடியிருப்பு பகுதி அமைக்கப்பட உள்ளது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்