மீண்டும் விஜய்யுடன் இணையும் யுகேந்திரன்..
4 வைகாசி 2024 சனி 09:10 | பார்வைகள் : 6084
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரசாந்த், மோகன், பிரபு தேவா, அஜ்மல், ஜெயராம் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் யுகேந்திரன் நடித்து வருவதாகவும் அவரும் வில்லன்களில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் விஜய் மற்றும் யுகேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு நடந்தது என்னை அவர் ஞாபகம் வைத்திருப்பாரா? என்று நினைத்த போது அவர் என்னை அழைத்து நாம் இருவரும் இணைந்து நடித்தது 15 வருடத்திற்கு முன்பு அல்ல 18 வருடங்களுக்கு முன்பு என்று அவர் கூறியதோடு ’திருப்பாச்சி’ தான் நாம் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் என்று கூறி என்னை அசத்தினார்.
அவருடைய ஞாபக சக்தியை பார்த்து நான் அசந்து விட்டேன் என்றும் என்னிடம் அவர் அன்று போலவே இன்றும் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தான் வில்லன்களில் ஒருவராகவும் நடித்துள்ளதாகவும் யுகேந்திரன் கூறியுள்ளார்
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan