நாடு முழுவதும் பலத்த போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை!!
4 வைகாசி 2024 சனி 07:21 | பார்வைகள் : 11108
இன்று மே 4 ஆம் திகதி, நாடு முழுவதும் வீதி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு, ‘செம்மஞ்சள்’ நிறத்தில் எச்சரிக்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறையை அடுத்து, வெளிச்செல்லும் வீதிகள் (départs ) அனைத்திலும் மிகுந்த நெருக்கடி ஏற்படும் எனவும், குறிப்பாக இல் து பிரான்சுக்குள் A6, A10 மற்றும் A86, A6B சாலைகள் பலத்த நெருக்கடியை சந்திக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புகைப்படத்தைக் காண்க : இடது பக்கம் வெளிச்செல்லும் வீதிகளுக்கான (départs) வரைபடம். வலது புறம் உள்வரும் (Retours) வீதிகளுக்கான வரைபடம்.
வீதி போக்குவரத்து அவதானிப்பாளர்களான Bison Futé இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இல் து பிரான்சுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan