ஜப்பானில் பறவைக்காச்சல் - அழிக்கப்படும் கோழிகள்
4 வைகாசி 2024 சனி 07:14 | பார்வைகள் : 11307
ஜப்பானின் சிகா மாகாணம் டோமிசோடா நகரில் ஒரு கோழிப்பண்ணை செயல்படுகிறது.
இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த பண்ணையில் சில கோழிகள் மர்மமாக இறந்தன.
இதனையடுத்து அங்குள்ள கோழிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஏவியன் இன்புளூயன்சா வைரசால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அந்த கோழிகளுக்கு பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அந்த பண்ணையை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மற்ற கோழிகளுக்கு இந்த பறவைக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த அங்கு சுமார் 57 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டு உள்ளன.
இந்த பண்ணையை சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவில் கோழிகள் மற்றும் முட்டைகளைக் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது


























Bons Plans
Annuaire
Scan