பிலிபைன்ஸில் நிலநடுக்கம் - பீதியில் அலறும் தீவுக்கூட்டம்
4 வைகாசி 2024 சனி 07:12 | பார்வைகள் : 7691
மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள தீவு மாகாணமான லெய்டில் வெள்ளிக்கிழமை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .
இந்த தாக்கத்தில் குறிப்பிட்டளவு சேதங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் ரிசர்ச் சென்டர் ஃபார் ஜியோசயின்ஸ் (geo science ) 5.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கத்தை பதிவு செய்தது .
அதன் மையத்தின் ஆழம் 10 கி.மீ என்றும் கூறியது.
கடல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் குறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகளிடமிருந்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
பிலிபைன்ஸ் தீவுக்கூட்டம் பசிபிக் "ring of fire "இல் உள்ளது, அங்கு எரிமலை செயல்பாடு மற்றும் பூகம்பங்கள் பொதுவானவையே.
இருப்பினும் மக்கள் மத்தியில் ஓர் பீதி நிலவி வருகிறது.
சமீபகாலமாக குறித்த பிரதேசங்களில் அடிக்கடி நிலநடுக்கங்கள் தாக்கி வருகின்றது.


























Bons Plans
Annuaire
Scan