நெடுங்கேணியில் கணவன் சடலமாக மீட்பு - மனைவி எடுத்த விபரீத முடிவு

3 வைகாசி 2024 வெள்ளி 11:45 | பார்வைகள் : 5459
வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவனின் உயிரிழப்பை அறிந்த மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார்.
நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அரைக்கும் ஆலை ஒன்றினை நடாத்தி வந்த வேதாரணியம் லோகநாதன் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அறிந்த அவரது மனைவியான லோகநாதன் பரமேஸ்வரி (வயது 37) தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட ஆண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025