Paristamil Navigation Paristamil advert login

என் பேரழகு பெண்மயிலே

என் பேரழகு பெண்மயிலே

3 வைகாசி 2024 வெள்ளி 09:38 | பார்வைகள் : 5123


என் பெண்மயிலே...

மாலைநேர பொழுதில்
மலையடிவாரத்தில்...

அழகு மயில்கள் தோகை
விரித்தாடும் நேரத்தில்...

என் பெண்மயிலே நீ
ஏன் அங்கு சென்றாய்...

நீயும்
தோகைவிரித்தாட சென்றாயோ...

காய்ந்து கிடக்கும் பூமியில்
உன் பாதம் பட்டால்...

மண்ணில் புதைந்த விதைகள்
எல்லாம் புத்துயிர் பெறுமடி...

வளர்ந்து
நிற்கும் தென்னையும்...

பாலைவிடும்
உன் பாதம் பட்டால்...

மலைப்பாறைகளிலும்
நீர் சுரக்கும்...

என்னுயிரே உன்
பார்வை பட்டால்...

வயலில்
நடைபோடும் உன்னோடு...

வாழ்க்கை
நடைபோட காத்திருக்கிறேன்...

உன் இதழ்கள் விரித்து
நீயும் சம்மதம் சொன்னால்...

வாழைமரம் கட்டுவேன்
என் வீட்டு வாசலில்...

என் விழிகளை நேருக்குநேர்
சந்தித்து பதில் சொல்லடி...

அழகு மயிலாடு நடைபோடும்
பேரழகு என் பெண்மயிலே.....
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்