பாபா வங்காவின் கணிப்புகள் - சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள்
3 வைகாசி 2024 வெள்ளி 09:08 | பார்வைகள் : 1541
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், பிரெக்சிட் போன்ற விடயங்களைக் கணித்த பாபா வங்கா, உலகம் இந்த ஆண்டில் மிகப்பெரிய மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைச் செய்யும் என கணித்திருந்தார்.
பாபா கூறியதைப்போலவே, அறிவியலாளர்கள் சிலர், நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து ஒன்றைத் தயாரித்துவருவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலை, Francis Crick நிறுவனம் மற்றும் லண்டன் பல்கலைக் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் சிலர் இணைந்து, நுரையீரல் புற்றுநோய்க்கெதிரான LungVax என்னும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.
இப்படி பாபாவின் கணிப்புகள் உண்மையாகிக்கொண்டே வருவதால் வியப்பிலாழ்ந்துள்ள பிரித்தானியர்கள், 2024ஆம் ஆண்டைக்குறித்து பாபா கணித்துள்ள சில விடயங்கள் உண்மையாகிவருவதால் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளார்கள்.
பிரித்தானியாவின் பொருளாதார வீழ்ச்சி குறித்து பாபா கணித்துள்ள ஒரு விடயம் பலித்துள்ளது. பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று மாதங்களில் 0.3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததைக் குறித்த செய்திகள் வெளியாகிவருவது பெரும்பாலானோர் அறிந்ததே.
இதற்கிடையில், நேற்று நிகழ்ந்த ஒரு விடயம், பிரித்தானியர்களை வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஆம், 2024ஆம் ஆண்டில், அச்சுறுத்தும் வானிலையும் இயற்கைப் பேரழிவுகளும் ஏற்படும் என கணித்துள்ளார் பாபா.
இரவு பயங்கரமாக இடியும் மின்னலுமாக மக்களை உறங்கவிடாமல் தடுக்க, மீண்டும் இடி மின்னலுடன் மழை கொட்டித்தீர்க்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்க, பாபா கணித்ததெல்லாம் அப்படியே நடக்கிறதே என வியப்பிலாழ்ந்துள்ளர்கள் அவர்கள்.