Bicêtre சுரங்கத்துக்குள் தீப்பிடித்து எரிந்த பேருந்து! - போக்குவரத்து தடை!
3 வைகாசி 2024 வெள்ளி 07:36 | பார்வைகள் : 9617
பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, A6b சாலை இரு திசைகளிலும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணி அளவில் Bicêtre சுரங்கம் வழியாக பயணித்த பேருந்து ஒன்றே திடீரென தீப்பிடித்துள்ளது. அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினர், பேருந்தை அணைத்து சுரங்கத்துக்குள் இருந்து வெளியே எடுக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர்.
இன்று காலை 7.30 மணி நிலவரப்படி போக்குவரத்து பரிசில் இருந்து Hay-les-Roses வரை இரு திசைகளிலும் போக்குவரத்து தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan