ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா?

3 வைகாசி 2024 வெள்ளி 04:49 | பார்வைகள் : 6290
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக நேற்று செய்தி வெளியான நிலையில் அந்த படத்தை தயாரிப்பது யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
ஏற்கனவே இசைஞானி இளையராஜா உள்பட சில பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாராக உள்ள நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்த தகவல் நேற்று கசிந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்க இருப்பது பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடியவாலா என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கபில்தேவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’83’ படம் உள்பட ஏராளமான பாலிவுட் படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சல்மான்கான் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சிக்கந்தர்’ படத்தையும் இவர் தான் தயாரிக்க உள்ளார் என்பது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்தை சஜித் நாடியாவாலா நேரில் சந்தித்த புகைப்படம் வைரலான நிலையில் அவரது தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்த படம் தான் ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ரஜினி கேரக்டரில் ஷாருக்கான் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஷாருக்கான் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025