இலங்கையில் எரிவாயு விலை குறைப்பு: புதிய விலை நாளை அறிவிப்பு
2 வைகாசி 2024 வியாழன் 16:22 | பார்வைகள் : 5783
உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடைமுறையில் 4,115 ரூபாவாக காணப்படும் 12.5 கிலோகிராம் நிறைகொண்ட எரிவாயு கொள்கலன்களின் விலையை 4000 இற்கும் குறைவாக நிர்ணயிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை (03) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட புதிய விலை நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan