உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

2 வைகாசி 2024 வியாழன் 12:27 | பார்வைகள் : 7527
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே இறுதி வாரத்தில் வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது.
இம்மாதத்துக்குள் முடிவுகளை வெளியிட முடியும் என திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 281,445 பாடசாலை மூல விண்ணப்பதாரர்களும் மற்றும் 65,531 பேர் தனியார் விண்ணப்பதாரர்களுமாவர்.