ஈஃபிள் கோபுரத்தில் மின்னல் தாக்குதல்!
2 வைகாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 11430
நேற்று மே 1 ஆம் திகதி மாலை முதல் பரிஸ் உள்ளிட்ட இல் து பிரான்ஸ் மாகாணங்களுக்கும், அதேபோல் நாட்ட்ன் வடக்குப் பகுதிகள் சிலவற்றுக்கும் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், நேற்று பரிசில் பலத்த மின்னல் தாக்குதல்கள் பதிவான நிலையில், ஈஃபிள் கோபுரம் மீதும் மின்னல் தாக்கியுள்ளது. ஈஃபிள் கோபுரம் மீது மின்னல் தாக்குவது, படிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள Palais d'Iéna கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கமராவில் பதிவானது.
அதேவேளை புகைப்படக்கலைஞர் Bertrand Kulik, தனது கமராவில் கட்சிதமாக அந்த மின்னல் தாக்குதல்களை படம் பிடித்திருந்தார்.
ஈஃபிள் கோபுரம் மீது நிகழும் மின்னல் தாக்குல்களினால் கோபுரத்துக்கோ, அதில் நிற்பவர்களுக்கோ எந்த ஆபத்தும் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan