செளந்தர்யா ரஜினிகாந்த் படத்திற்கு சிக்கல் ...?
1 வைகாசி 2024 புதன் 15:31 | பார்வைகள் : 10365
கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இருந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது அமேசான் ஓடிடிக்காக ஒரு வெப்தொடரை தயாரித்து வருகிறார். ’கேங்ஸ் குருதிப்புனல்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த தொடரை நோவா என்பவர் இயக்கி வரும் நிலையில் இதில் அசோக் செல்வன், நாசர், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இத்தொடரின் படப்பிடிப்பு புதுச்சேரியல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் சவுந்தர்யா. திட்டமிட்டதை விட இயக்குனர் அதிக செலவு செய்ததால் அமேசான் நிறுவனம் மேற்கொண்டு பணம் தர மறுத்துவிட்டதாம். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சவுந்தர்யா படப்பிடிப்பை கேன்சல் செய்யச் சொன்னாராம். மேற்கொண்டு அமேசான் நிறுவனத்துடன் பேசி அவர்கள் கூடுதல் தொகை தர சம்மதித்தால் மட்டுமே படப்பிடிப்பைத் தொடர முடியும் நிலை என்கிறார்கள்.
படத்தில் பிஸியான நடிகர்கள், நடிகைகள் நடிப்பதால் மீண்டும் அவர்களது தேதிகளை வாங்கி படப்பிடிப்பு நடத்த இன்னும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாம்.


























Bons Plans
Annuaire
Scan