Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அதிரடி முடிவு..!

ஐஸ்வர்யா  ரஜினிகாந்தின் அதிரடி முடிவு..!

1 வைகாசி 2024 புதன் 15:18 | பார்வைகள் : 7162


 கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அவர் தனுஷை சட்டரீதியாக விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்பதும் இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தனுஷ் ,ஐஸ்வர்யா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தனுஷை விட்டு பிரிந்த பின்னர் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஐஸ்வர்யா தற்போது தனக்கென ஒரு புதிய வீடு வாங்கி இருப்பதாகவும் அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிரகப்பிரவேசத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இந்த கிரகப்பிரவேசத்தில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்