Paristamil Navigation Paristamil advert login

மே தின ஆர்ப்பாட்டம்! - ஜனாதிபதி வாழ்த்து - பரிசில் 50,000 பேர் பங்கேற்பு!

மே தின ஆர்ப்பாட்டம்! - ஜனாதிபதி வாழ்த்து - பரிசில் 50,000 பேர் பங்கேற்பு!

1 வைகாசி 2024 புதன் 14:59 | பார்வைகள் : 9146


இன்று மே 1 ஆம் திகதி, பரிசில் மே தின ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50,000 பேர் பங்கேற்றதாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 

ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 2 மணி அளவில் Place de la République பகுதியில் ஆரம்பித்து Place de la Nation வரை இடம்பெற்றது. ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோதனையிடப்பட்டனர். அவர்களில் ஆயுதங்கள் வைத்திருந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். கத்தி உள்ளிட்ட சில ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

***

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிம்பிக் போட்டிக்கு எதிரானவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஒலிம்பிக் வளையங்களை அட்டைகளில் ஒட்டி, அவற்றை தீ வைத்து எரித்தனர். 

**

சர்வதேச உழைப்பாளர் தினத்துக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவர் தனது X சமூகவலைத்தள பதிவில் ’நீங்கள் பிரான்சுக்கு உணவளிக்கின்றீர்கள். நீங்கள் எங்கள் மரபுகளுக்கு மதிப்பளிக்கின்றீர்கள். எங்களை பெருமை கொள்ளச் செய்கின்றீர்கள்!” என பதிவிட்டார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்