ரஃபா பிரதேசத்தை தாக்குவது உறுதி - இஸ்ரேல் பிரதமர் திட்டம்

1 வைகாசி 2024 புதன் 12:11 | பார்வைகள் : 11776
இஸ்ரேல் காசா பிரதேசத்தின் மீது பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரை நிச்சயமாக தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.
போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், இஸ்ரேலியப் படைகள் ஹமாஸை முடிவுக்குக் கொண்டுவர ரஃபாவிற்குள் நுழையும் என்று அவர் கூறினார்.
இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ரஃபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.
பணயக்கைதிகளை விடுவிக்கவும், ஓரளவு நிவாரணம் பெறவும், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆனால் 'எங்கள் இலக்குகளை அடையாமல் போரை நிறுத்துவதில் உடன்பாடு இல்லை. நாங்கள் ரஃபாவில் நுழைகிறோம்.
ஹமாஸ் படைகளை முற்றாக அழிப்போம்" என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025