Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில் மசூதியில்  நடந்த பயங்கரம் - 6 பேர் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில் மசூதியில்  நடந்த பயங்கரம் - 6 பேர் சுட்டுக்கொலை!

1 வைகாசி 2024 புதன் 11:50 | பார்வைகள் : 9569


ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடாத்தியதில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணம், கசாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஷியா மசூதியில் நேற்றிரவு (29-04-2024) வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபர், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளனர்.


தாக்குதல் நடத்திய நபர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார். கொல்லப்பட்டவர்களில் மசூதியின் இமாமும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஷியா முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலமான இந்த மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக உள்துறை மந்திரியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் குவானி தெரிவித்தார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்