கல்டனில் கோர விபத்து - ஒருவர் பலி
1 வைகாசி 2024 புதன் 07:05 | பார்வைகள் : 11845
கனடாவின் கல்டனில் கல்டனின் கிங்ஸ் வீதியில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சைக்கிளில் சென்றவர் ஒருவர் வாகனத்தில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகள் வாகனமொன்றே சைக்கிளில் மோதுண்டதாக ஒன்றாரியோ மத்திய பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பாதை மூடப்பட்டுள்ளது.
சில மணித்தியாலங்கள் பாதை மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan