கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு - திடீரென வெடித்த துப்பாக்கி

30 சித்திரை 2024 செவ்வாய் 10:37 | பார்வைகள் : 4830
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி செவ்வாய்க்கிழமை (04) காலை தீடிரென வெடித்ததில் முனையத்தின் கூரை சேதமடைந்துள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் தலைமை விமானப்படையைச் சேர்ந்தவரிடம் இருந்த T-56 ரக துப்பாக்கி தவறுதலாக காலை 10.30 மணியளவில் வெடித்துள்ளது என்றும் இதனால், உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில், பணம் செலுத்தி வசதிகளைப் பெறும் சிறப்பு விசேட விருந்தினர்கள் மற்றும் உலகின் முன்னணி வர்த்தகர்கள் இந்த முனையத்தின் ஊடாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்கின்றனர்.
கடமையில் இருந்த விமானப்பட வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025