Paristamil Navigation Paristamil advert login

பரிசில் தீ விபத்து! - மூவர் பலி!

பரிசில் தீ விபத்து! - மூவர் பலி!

30 சித்திரை 2024 செவ்வாய் 10:31 | பார்வைகள் : 1326


பரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஏப்ரல் 29 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2 ஆம் வட்டாரத்தின் Boulevard des Italians பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நள்ளிரவில் திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றிக்கொண்டது. ஆறாவது தளத்தில் ஏற்பட்ட தீ, ஏழாவது தளத்துக்கும் பரவியது.

தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு மீட்புப்பணியும், தீயை அணிக்கும் பணியும் இடம்பெற்றது. ஆறு பேர் வரை வெளியேற்றப்பட்டதாக அறிய முடிகிறது. அதேவேளை, இத்தீவிபத்தில் மூவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மூவர் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் தீயணைப்பு படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்