Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சிறுவன்!

Aulnay-sous-Bois : துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சிறுவன்!

30 சித்திரை 2024 செவ்வாய் 06:31 | பார்வைகள் : 5972


16 வயதுடைய சிறுவன் ஒருவன், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளான்.  Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

Avenue du Docteur Schweitzer வீதியில் ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. நண்பர்களோடு நின்றிருந்த குறித்த சிறுவனை நோக்கி ஆயுத்தாரி ஒருவர் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் குறித்த சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த சிறுவன் Sevran  நகரைச் சேர்ந்தவன் எனவும், காவல்துறையினரால் அறியப்படாதவன் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனுடன் இருந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்ததாகவும், அவனும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்