பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்!

29 சித்திரை 2024 திங்கள் 15:46 | பார்வைகள் : 7825
பரிஸ் 5 ஆம் வட்டாரத்தின் rue de la Sorbonne வீதியில் இன்று திங்கட்கிழமை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. Sorbonne பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
நண்பகலுக்குப் பின்னர் அங்கு ஒன்றுகூடிய 50 வரையான போராட்டக்காரர்கள், இராட்சத அளவில் பாலஸ்தீன கொடி ஒன்றை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்சில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அதன் போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.
இந்த பரபரப்புக்கு நடுவே பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1