'இந்தியன் 2' படத்தில் ரஜினிகாந்த் இணைகிறாரா?
 
                    29 சித்திரை 2024 திங்கள் 11:07 | பார்வைகள் : 5593
'இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை உலகின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ’பொன்னியின் செல்வன்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு மீண்டும் கமல், ரஜினி இருவரும் ஒரே விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது.
அதுமட்டுமின்றி ஷங்கர் தற்போது ’கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தின் நாயகன் ராம்சரண் தேஜாவும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் அதுமட்டுமின்றி வேறு சில பிரபலங்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ’இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்றும் ரசிகர்களுக்கு இந்த விழா ஒரு விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan