ஈராக்கில் பிரபல Tik Tok பிரபலம் சுட்டுக் கொலை

29 சித்திரை 2024 திங்கள் 08:29 | பார்வைகள் : 5292
ஈராக்கில் பிரபல Tik Tok பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உந்துருளிக்கு வருகை தந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஈராக் பாதுகாப்பு படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டிக் டாக் மூலம் வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு இந்நாட்டு நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025